EJJI SPEAKS
Tamil Paaramabariyam
(Tamil Heritage)
invites you and your friends to an evening with
Ejji Umamahesh
(A Congenital Sybarite)
presented by
Chithan
(Editor: Yugamayini)
at 5.30 pm on the 5th of June, 2010
at Vinobha Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.
(Biodata of Ejji as PDF is attached)
Chithan writes: சுவாமிநாதன் ஐயா ஒரு நாள் என்னை தொலைபேசியில் அழைத்து தான் ஒரு வலைதளத்துக்கான யூஆரெல் அனுப்பியிருப்பதாகவும், அதில் ஒரு முற்றிலும் அசாதாரண மனிதர் ஒருவரைப் பற்றி அறிந்து கொள்ளலாம் என்றும், வாசித்த பின் அது குறித்து பேசுவோம் என்றும் கூறினார். தளம் சென்றேன். வாசித்தேன். நம்மில் பலர் இப்படியெல்லாம் செய்தால் என்ன என்று கனவும் கற்பனையும் செய்து கொண்டிருக்கும் ஏராளமான செயல்களை, அத்தளத்தில் அறிமுகமான மனிதர் அனாயாசமாக அலட்டிக் கொள்ளாமல் செய்திருக்கிறார். வியந்து போனேன். பின்னர் சுவாமிநாதன் ஐயாவுடன் அவரை அவருடைய வீட்டில் சென்று நேரில் கண்டு அளவளாவி தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் செய்தேன். இதோ அவரை பற்றிய சிறு குறிப்பு கீழே உங்கள் சுவைப்புக்கு: எஜ்ஜி-யின் தன் (அ)மதிப்பீடு எஜ்ஜி. கே. உமாமகேஷ் நாற்பத்தியோரு வருட அனுபவங்களை மேலதிகமாகக் கொண்ட இருபது வயது ‘இளைஞர்”. தன் வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடியையும் ‘தான்தோன்றித் தனமாக’ மட்டுமே வாழ்ந்துள்ளதாகப் பெருமை கொள்கிறார். குட் ஷெப்பர்ட் கான்வெண்ட்-டிலும், மெட்ராஸ் கிரிஸ்டியன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியிலும், லயோலா கல்லூரியிலும் தொடர்ந்து தவறாது கல்விக் கட்டணம் செலுத்திக் கொண்டிருந்த எஜ்ஜியின் (ஐயோ பாவம்!) தந்தையால் தான் எஜ்ஜியின் எல்லா கற்றலும் சாத்தியமாயிற்று. எஜ்ஜி என்று எல்லோராலும் செல்லமாக அறியப்பட்ட இவர், சென்னை சஃபையர் தியேட்டர் வளாகத்தில் கழிவறைத் தூய்மை மற்றும் பராமரிப்பு மேற்பார்வையாளராக தன் வாழ்க்கையை துவக்குகிறார். அத்துடன் சென்னை போட் கிளப் பகுதியில்,கைவண்டி ஒன்றைத் தள்ளிக் கொண்டு, எல்லா வீட்டுக் குப்பைக் கழிவுகளை சேகரித்து அகற்றும் பகுதி நேரப் பணியையும் செய்து வருகிறார். 1970இல், இந்தியாவில் முதன்முறையாக, எஜ்ஜி கட்டிட வளாகப் பராமரிப்பு நிறுவனமொன்றைத் தொடங்குகிறார். எலெக்ட்ரீஷியன், ப்ளம்பர், கார்பெண்டர், மோட்டார் , போர் மெக்கானிக்குகள் கொண்ட, தொலைபேசி அழைப்பில் உடனடி சேவை தருகிற , எஜ்ஜி வீட்டு சேவை என்கிற நிறுவனமொன்றை1971இல், இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொடங்குகிறார். 1991 இல், வாழ்நாளில் இருபது ’பணி’ வருடங்கள் மட்டுமே பணமீட்டும் இலக்கில் வாழ்வது என்கிற கருத்திற்கேற்ப, தொழில் நற்பெயரோடு உச்சத்தில் இருந்த போது, சுய ஓய்வு பெறுகிறார்.1991லிருந்து தனக்கு எப்போது என்ன தோன்றுகிறதோ, அதை செய்து கொண்டு “ எலியோட்ட்த் தடகள வீரர் (ஓய்வு)” [Rat-race Runner (Rtd)] என்று தன்னை அழைத்துக் கொள்கிறார். இப்போது2009இல், தன்னுடைய பல ஆண்டுகளான ஓய்வு வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு “பிறவி ஆடம்பரப்பிரியர் ’ என்று அவருடைய அழைப்பு அட்டையில் பதிவு செய்துள்ளார். தான்தோன்றித்தனமாகவே தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டலும், வாழ்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்கப் பிரியப்படுபவரான இவரை வெறும் விளையாட்டுப்பிரியராகவே நினைத்து ஒதுக்கிவிடமுடியாது. கணக்கிலடங்கா அரிய புத்தகங்களைப் படித்தும், அபூர்வமான புத்தகங்கள், சினிமா மற்றும் பல்வேறு பொருட்களை சேகரித்தும், பிறர்க்கு கிடைக்காத அனுபவங்களை தேடி அடைந்தும், தனக்கென மற்றரவர்களிடமிருந்து மாறுபட்டதொரு வாழ்க்கைக்கோட்பாடை வகுத்துக் கொண்டவராவார். இவரைப் பற்றி இன்னும் சில சிறு குறிப்புகள்: + ஒரு அனைத்துண்ணி. உலகின் சகலமானதையும் உண்ணுபவர் + (விண்டேஜ்) புராதன கார்கள் சேகரிப்பும், இளம் வயதில் ஸ்பீட் கார் பந்தயங்களில் ஈடுபாடு கொண்டிருந்து , 2004இல் முதலாவது இந்தோ ஆசிய கார் ராலியில், ஒன்பது நாடுகளின் வழியாக 8000 கி.மீ தூரமாக, இந்தியாவிலிருந்து இந்தோனேஷியா வரை சென்றவர். இவ்வருடம் ஜனவரியில் ஆஸ்திரியா,இதாலி, ஃபிரான்ஸ், ஸ்பெய்ன், மொராக்கோ, மேற்கு சஹாரா, மாரிடேனியா, மாலி வழியாக, ஐரோப்பா/ ஆஃப்ரிக்கா கடக்கும் புடாபெஸ்ட் – பமாகோ கார் ராலியில் கலந்து கொண்ட ஒரே இந்தியர் என்கிற பெருமைக்குரியவர். டிம்பக்டூ பயணம் மேற்கொண்டவர் + 1999 டிசம்பர் 31 அன்று இரவு மில்லினியம் சூரிய உதயத்தைக் காண கட்சத் தீவுக்குச் சென்ற சிலரில் ஒருவர். + 1975இல் ஸ்யாமளாவை, வெறும் 60 ரூபாய் செலவில் திருமணம் செய்து கொண்டு ரசிகா, சாரிகா என்று ஒரு மகள்களுக்கு தந்தையும் ஆவார். + மதமற்றவர், கடவுள் நம்பிக்கை அற்றவர் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்ளுகிறார். + மதராஸ் பிளேயர்ஸ் என்கிற ஆங்கில நாடக்க் குழுவைச் சேர்ந்தவர். மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து திரைப்பட்த்திலும், சந்தோஷ் சிவனின் நவரசா திரைப்பட்த்திலும், பிஃபோர் தி ரைன்ஸ் என்கிற ஆங்கில பட்த்திலும் நடித்துள்ளார். ( இன்னும் சில திரைப்படங்கள் , ஆனால் தன்னுடைய ஆவல் காரணமாக அனைத்திலும் சம்பளம் என்று எதையுமே பெற்றுக் கொள்ளாது நடித்திருக்கிறார்.) + ஏராளமானோர் இவரை ஒரு இயற்கைக்கு மாறான (eccentric) மனிதர் என்று நினைக்க, இவரோ மற்றவர்களிடமிருந்து தான் மாறுபட்டு நிற்பதாகவும்,காரணம், சாதாரண வாழ்க்கை ’போர’டிப்பதாகவும் கூறுகிறார். தன்னுடைய வாழ்க்கையின் தத்துவமாக – “ வாழு! இருக்காதே!” என்கிறார். இப்படிப்பட்ட ஒரு அபூர்வ மனிதரை சந்தித்து, அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடியவைகளை கண்டறியும் நோக்கத்துடன், வருகிற ஜூன் மாதம் சனிக்கிழமை அன்று 5ஆம் தேதி அன்று மாலை 5.30மணிக்கு தக்கர் பாபா பள்ளிக்கூட வளாக அரங்கத்தில் எஜ்ஜியுடனான சந்திப்பு ஒழுங்கு செய்யப்ப்படுள்ளது. இக்கூட்டத்தில் எஜ்ஜி அவர்களை அறிமுகப்படுத்தி நேர்காணலை ஒழுங்கு செய்யும் பணியினை சுவாமிநாதன் ஐயா என்வசம் ஒப்படைத்திருக்கிறார். இதனை ஒரு நல்வாய்ப்பாகக் கருதுகிறேன். அன்று அவர் கீழ் காணும் நான்கு தேர்வுசெய்யப்பட்ட தலைப்புகளில் உரையாடி பல தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளுகிறார். · எஜ்ஜியின் பயண அனுபவமாக, வடகிழக்கு இந்தியா- மறந்துபோனதொரு பகுதி · எஜ்ஜியின் ஆடம்பர வாழ்க்கை முறை · போதும் பணம் என்னும் குணம்- பணத்தின் பின் அலைந்து துரத்துவதில், காட்டை மனத்தில் கொண்டு,மரத்தை கவனியாமல் விட்டுவிடுவது. · குழந்தைகளை மோசமாகவும், தவறாகவும் நட்த்துபவர்கள் பெற்றோர்களும், ஆசிரியர்களுமே · இவை குறித்தான மேலதிக தகவல்களுக்கு எஜ்ஜியின் வலைத்தளம் www.ejji.4t.com அன்புடன் அழைக்கும் சித்தன் (யுகமாயினி Sirs Re. Karthigesu is a popularly known modern malaysian tamil writer . He is part & parcel of yugamayini. Please read his comments. Regards, Chithan ----- Forwarded Message -- From: karthi <karthigesur@gmail.com> To: chithan prasad <chithankalai@yahoo.co.in>Sent: Fri, 4 June, 2010 4:48:56 PM ரெ.கா
அபூர்வமான மனிதர்!உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சூட்டில் ஓர் 'உலகத் தமிழனை' அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். தன்னைத் 'தமிழனாய்ச்' சுருக்கிக்கொள்ள வேண்டும் என்றுதான்இன்று தீவிரமாகப் பேசுகிறார்கள். இவர் 'உலகனாய்' விரிவடைந்திருக்கிறார்.இவரைப் பற்றி மேலும் தகவல் தெரிவியுங்கள்.

